Prediction based YOUR LAGNA

நீங்கள் நிறைய பயணம் செய்ய விரும்புவீர்கள். பிறர் பயணம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் வாழ்க்கை சூழ்நிலையின் காரணமாக நீங்கள் செய்வீர்கள். நீங்கள் மிகவும் புத்தி- சாலி. நல்ல தோற்றம் உடையவர் நீங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் மேலான நிலையை அடைவீர்கள். நீங்கள் தந்திரமாகச் செயல் படுவதை பிறர் அறிவார்கள். ஒரு வேலையைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ஈடுபட்டீர்களானால் நீங்கள் கஷ்டப்படுவீர்கள். குறுகிய காலத்தில் வெற்றி பெற நினைப்பீர்கள். நீண்டகாலம் உழைத்து வெற்றி பெற விரும்ப மாட்டீர்கள். சட்டென்று கோபப்பட்டு விடுவீர்கள். ஆனால் சட்டென்று எதுவுமே நடக்காதமாதிரி மாறிவிடுவீர்கள். நல்ல உறவினர்களும், நல்ல நண்பர்களும் உங்களைச் சுற்றியிருப்பது உங்கள் விசேஷத்தன்மையாகும். சிறப்பான நண்பர்கள் மீது தனிக் கவனம் செலுத்துவீர்கள். ஆனால் நீங்கள் தந்திரமாகச் செயல்படுவதாக பிறர் நினைப்பார்கள். உங்களுக்கு நண்பர்கள் தேவைப்படும் பொழுது நட்புணர்வையும் நெருக்கத்தையும் காட்டுவீர்கள். ஆனால் அவர்களின் உதவி தேவை இல்லை என்றால் உடனே உதறி விடுவீர்கள். பொதுவாழ்வில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும் அரசியல் நிறுவனங்களிலும், மத நிறுவனங்களிலும் வேலை செய்வதைவிட விஞ்ஞான, சமூக நிறுவனங்களின் வேலை செய்வதை விரும்புவீர்கள். பொது மேடைகளில் பேசும் உங்கள் திறமை அற்புதமாக இருக்கும். பொது மக்களையும் நண்பர்களையும் கவர நல்ல பொறுக்கி எடுத்த வார்த்தை களையே பயன்படுத்துவீர்கள். அதனால் அவர்கட்கு மிகுந்த உண்டாகும் சில சமயங்களில் நகைச் சுவையைப் பயன்படுத்துவீர்கள். பிறரைக் கவர கலைகளை, ஆடல்பாடல் இசை போன்ற கலைகளைப் பயன்படுத்துவீர்கள். எல்லாத் துறைகளையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் எதிலும் ஆழமாக ஈடுபடமாட்டீர்கள். நவீன புதிய விஷயங்கள் தொழில் நுட்பங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பல வேலைகளில் ஈடுபடுவதை விரும்புவீர்கள். சோம்பேறித்தனமாக இருக்கமாட்டீர்கள். நீண்ட மூக்கு, அழகிய கண்களும், அடர்த்தியான தலை முடியும் பெற்றிருப்பீர்கள். ஒரு தலைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், வயதிற்கு தக்கபடி விரும்புவீர்கள். பொது நலவாழ்வில் உண்மையாகவே நெருங்கி உழைப்பீர்கள். சில சமயங்களில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விட தோற்றம், செல்வம், கல்வி இவற்றில் மேலானவராக இருக்கலாம். எதிர்பாலி- னர் உங்களை ஏமாற்றலாம் ஏனெனில் நீங்கள் அவரை/ அவளை நம்பியதால் அவர் ஏமாற்றலாம். ஜாக்கிரதையாக இருங்கள். மற்றவர்களை விட நீங்கள் எதனையும் திறமை- யாகச் செய்வீர்கள். உங்களுக்கு எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் முகத்தில் புன் சிரிப்பு மாறாமல் இருப்பீர்கள். சின்ன வியாதிகள் வந்தாலும் உங்களால் தாங்க முடியாது.

********************************************************************************************